உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிராக்டருடன் கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

டிராக்டருடன் கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

ஆனைமலை; ஆனைமலை அருகே டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில், வாலிபர் இறந்தார்.தர்மபுரியை சேர்ந்த கோவிந்தன், 37, குடும்பத்துடன் வீரல்பட்டியில் தனியார் தோட்டத்தில் தங்கி கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.அப்போது, இவரது அண்ணன் மகனான கணபதி, 18, மொபைல் எடுத்துக்கொண்டு கிணறு அருகே சென்றார். டிராக்டர் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டதாகவும், கிணறு அருகில் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தன் குடும்பத்துடன் சென்று பார்த்தார்.அப்போது, அவரது அண்ணன் மகன், டிராக்டர் உடன் கிணற்றில் விழுந்து கிடந்தார். அவரும், உடன் வேலை பார்த்தவர்களும் சேர்ந்து டிராக்டரை அப்புறப்படுத்தி பார்த்த போது, கணபதி உடல் சிதைந்து இருந்தது. உடனடியாக அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ