உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறுத்தை பூனை குறுக்கே வந்ததில் வாலிபர் காயம்

 சிறுத்தை பூனை குறுக்கே வந்ததில் வாலிபர் காயம்

மேட்டுப்பாளையம்: சாலையில் சிறுத்தை பூனை குறுக்கே வந்ததால், பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் காயமடைந்தார். மேட்டுப்பாளையம் அருகே தேவனாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 32. இவர் தேக்கம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணி முடித்துவிட்டு, தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேக்கம்பட்டிக்கு அருகே கோழி பண்ணை பகுதிக்கு வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே சிறுத்தை பூனை ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ