உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதார் திருத்தம்: போத்தனூரில் சிறப்பு முகாம்

ஆதார் திருத்தம்: போத்தனூரில் சிறப்பு முகாம்

கோவை : ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வரும் 15ம் தேதி இறுதி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், போத்தனூர் பகுதியில் போத்தனூர் ரயில் பயணிகள் சங்கம், கேரள சமாஜம், போத்தனூர் போஸ்ட் ஆபீஸ் சார்பில், ஆதார் அப்டேட் செய்வதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.நாளையும் (டிச., 10), நாளை மறுதினமும் (டிச.,11ம் தேதி), போத்தனூர் கேரள சமாஜத்தில் முகாம் நடக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக பதிவு செய்ய, கட்டணம் இல்லை. பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அசல் ஆதார் தேவை.ஆதார் திருத்தம் செய்ய ரூ.50 கட்டணம். அசல் ஆதார், முகவரி மாற்றத்துக்கான ஆதார சான்று, மொபைல் எண். வங்கி பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான்கார்டு, பள்ளிச் சான்று இதுபோன்ற ஏதேனும் ஓரிரு ஆவணங்கள் தேவை. ஆதார் முழுதாக அப்டேட் செய்ய, ரூ. 100 கட்டணம். பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம், கைரேகை, கருவிழிகள் பதிவு என முழுமையாக அப்டேட் செய்யப்படும். இதற்கும் மேற்கண்ட ஆவணங்கள் தேவை. இக்கட்டணங்கள் அனைத்தும், அரசால் நிர்ணயிக்கப்பட்டவை.முகாமுக்கான ஏற்பாடுகளை, போத்தனூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் முகமது ஷாகீர், பொதுச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி