உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கன்வாடிகளில் ஆதார் எண் சரிபார்ப்பு:  இணை உணவு வழங்க ஏற்பாடு

அங்கன்வாடிகளில் ஆதார் எண் சரிபார்ப்பு:  இணை உணவு வழங்க ஏற்பாடு

பொள்ளாச்சி: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது. இதில், இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முன்பருவக்கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதில் செய்கை பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது. இதன் வாயிலாக, குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள், 12 மாதங்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அதன்படி, கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் சரிபார்ப்புக்கு பின், இணை உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாக, 'பேஸ் ரெககன ை ஷன் ஆப்' வாயிலாக ஆதார் சரிபார்ப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், 2 வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், ஆதார் சரிபார்ப்புக்கு பின்னர், இணை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், குழந்தைகளுக்கு ஆதார் எண் பெறுவதற்கு பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறுகையில், '6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆதார் எண் பயன்படுத்தி இணை உணவு வழங்கப்படுகிறது. தற்போது, 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ