மேலும் செய்திகள்
சர்வர் கோளாறால் ஆதார் சேவை பாதிப்பு
27-Jan-2025
சூலுார்; சூலுார் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம், மூடப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அரசு கேபிள் டி.வி., நிறுவனத்தின் சார்பில், இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையம், சூலுார் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், திருத்தம் மேற்கொள்ள இங்கு தினமும் பொது மக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.கடந்த எட்டு மாதங்களாக செய்யபட்டு வந்த இந்த மையம், கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. 'ஆதார் மையம் தற்காலிகமாக செயல்படாது,'என, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வழக்கம் போல் ஆதாரில் திருத்தம் செய்ய வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'அரசு ஆதார் சேவை மையத்தில் குறைவான கட்டணம் என்பதால் பெரும்பாலானோர் இங்கு வருகின்றனர். ஆனால், பல நாட்களாக மையம் பூட்டப்பட்டுள்ளதால், தனியார் சேவை மையங்களை தேடி செல்லவேண்டி உள்ளது,' என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆதார் சேவை மைய ஊழியர் பணியில் இருந்து விலகி விட்டார். அதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. புதிய ஊழியர் நியமிக்கப்பட்ட உடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.
27-Jan-2025