உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவின் பால் முகவர்கள் உரிமம் புதுப்பிக்கணும்

ஆவின் பால் முகவர்கள் உரிமம் புதுப்பிக்கணும்

பொள்ளாச்சி; ஆவின் பால் முகவர்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள, கோவை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. கோயமுத்துார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், 635 சில்லறை பால் விற்பனை முகவர்கள் வாயிலாக, நுகர்வோர்களுக்கு பால் விற்கிறது. சில்லறை முகவர்களின் நலன் கருதி, பால் விற்பனை முகவர் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள,635 முகவர்களில் இதுவரை, 333 பேர் புதுப்பித்துள்ளனர். புதுப்பிக்காத முகவர்கள் வரும் 10ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்காத முகவர்களுக்கு, பால், தயிருக்கான கமிஷன் தொகை செப்.11 முதல் வழங்கப்படாது என, கோவை கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை