அதிவிரைவு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில் அபாரம்
போத்தனூர்; கோவை, வெள்ளலூர் அருகே மகாலிங்கபுரத்தில் அதிவிரைவு படை முகாம் உள்ளது. இங்கு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இரண்டாம் நிலை கமாண்டன்ட் ( ஓ.பி.எஸ்) சுனில்குமார் தலைமை வகித்தார்.கமாண்டன்ட் அபர்ணா போட்டியை துவக்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின், 1500, நூறு மீட்டர் ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தடை ஓட்டம் உள்ளிட்டவை நடந்தன.முதல் மூன்று இடங்களை பிடித்தோர் விபரம்:1500 மீட்டர் (ஆண்கள்):ஜெயசிங், ஜிஜித், சப்பா அப்பளசாமி,பெண்கள்: சால்வே தை பாரத், கல்பனா, உஷா.குண்டு எறிதல் (ஆண்கள்)விபின், பிரசாந்த், அருண்கிருஷ்ணாபெண்கள்: கோவிந்தம்மா, ஸ்ரீஜினா, சந்திரகலா.நீளம் தாண்டுதல் (ஆண்கள்).அஜித்குமார், சப்பா அப்பளசாமி, செந்தூர்பாண்டியன்.பெண்கள்: சந்திரகலா, கிரீஷ்மா, கோவிந்தம்மா400 மீட்டர் தடையோட்டம்: விஜித் விஜயன், சவுதா ரெட்டி, பிரசாந்த்.