உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூஜித்து தருவதாக கூறி 59 கிராம் நகை அபேஸ்

பூஜித்து தருவதாக கூறி 59 கிராம் நகை அபேஸ்

கோவை; கோவை, இடையர் வீதியை சேர்ந்தவர் சஞ்சய் மித்யா, 37. அதே பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். அதில், ஒன்றரை ஆண்டாக, மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுபோமான்ஸி என்பவர் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், அருகில் உள்ள வேறொரு கடையில் நகைகள் செய்ய பயன்படும் அச்சுக்களை வாங்கி வர, சஞ்சய் மித்யா கூறியுள்ளார். அந்தக் கடைக்குச் சென்ற சுபோமான்ஸி, அச்சுக்களை வாங்கியதோடு, ஏற்கனவே நகை செய்ய கொடுத்திருந்ததில், 59 கிராம் நகைகளை வாங்கி வந்தார். வரும் வழியில், 60 மற்றும் 25 வயதுடைய இருவர், சுபோமான்ஸியை பார்த்து, நகைகளை கொடுத்தால் பூஜித்து தருவதாக, ஹிந்தியில் கூறியுள்ளனர். அதை நம்பி, நகைகளை சுபோமான்ஸி கொடுத்தார். அந்நபர்கள் இருவரும் சுபோமான்ஸியை சிறிது துாரம் நடந்து சென்று விட்டு, திரும்பி வருமாறு கூறியிருக்கின்றனர். சுபோமான்ஸியும் அவர்கள் கூறியபடி, சிறிது துாரம் சென்று விட்டு திரும்பி வந்தபோது, இருவரும் மாயமாகியிருந்தனர். இதுகுறித்து சஞ்சய் மித்யாவிடம் சுபேமான்ஸி தெரிவித்தார். வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து, நகை திருடர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை