உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.சி., வாங்கி மோசடி; 3 பேர் கைது

ஏ.சி., வாங்கி மோசடி; 3 பேர் கைது

கோவை; கோவையில், ஆன்லைனில் ஏ.சி., வாங்குவது போல மோசடியில் ஈடுபட்ட, மூவரை போலீசார் கைது செய்தனர்.சூலுார், போகம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அதே பகுதியில், 'சிறுவாணி ஏர் கண்டிஷனரிங்' என்ற பெயரில் ஏ.சி., ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, கடந்த நவம்பர் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், தனது பெயர் சிவகுமார் என்றும், தான் பிரணவ் ஹார்ட்வேர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்திற்கு இரண்டு ஏ.சி.,கள் வேண்டும் என கேட்டார். அதுதொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., மற்றும் பணம் அனுப்பியது போல், போலி ரசீதையும் தினேஷ் குமாருக்கு அனுப்பியுள்ளார். இதை நம்பிய, தினேஷ்குமாரும், ஏ.சி.,யை கொடுத்துள்ளார். அதன்பின், வங்கி கணக்கில் பார்த்தபோது, பணம் வராதது தெரியவந்தது. அந்த நபர் அனுப்பிய ஜி.எஸ்.டி., மற்றும் பணம் அனுப்பிய ரசீதுகள் போலியானது என, தெரியவந்தது.இதுகுறித்து, தினேஷ்குமார், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதில், மோசடியில் ஈடுபட்ட அன்பு நகரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், கோட்டைமேட்டை சேர்ந்த சலீம், குனியமுத்தூரை சேர்ந்த மன்சூர் அலி ஆகிய, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ