மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
16-Jul-2025
பெ.நா.பாளையம் ; கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அமுதா, 43. இவரது மகன் நாகவிஷ்ணு, 23. இன்ஜினியரிங் படித்தவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை கூடலுார் கவுண்டம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது திடீரென நாய் குறுக்கே வந்ததால், நாய் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பும் போது, கீழே விழுந்து தலையின் பின்பக்கம் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கோவை அரசு மருத்துவமனைக்கு நாக விஷ்ணுவை அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jul-2025