உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குஷ் கஞ்சா விற்க வந்த கூட்டாளிகள் தளவாடங்களுடன் கைது

குஷ் கஞ்சா விற்க வந்த கூட்டாளிகள் தளவாடங்களுடன் கைது

கோவை: குடியலுார் பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.மாநகரில் சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், துடியலுார் பகுதியில் வாலிபர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், துடியலுார், வடமதுரை, பகுதியில் உள்ள ஒரு ஜிம் அருகில் சென்றபோது அங்கு ஒருவர் காரில் நின்று கொண்டிருந்தார்.அவரிடம் விசாரித்த போது, காருக்குள் 'குஷ்' எனப்படும் உயர் ரக கஞ்சா, எடை இயந்திரம், 'ஜிப் லாக்' கவர்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தபோது, அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரணாஸ், 22 என்பதும், தனது நண்பரான சாய்பாபா காலனியை சேர்ந்த சாய் பிரசாந்த், 25 என்பவருடன் சேர்ந்து வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து, 100 கிராம் குஷ் கஞ்சா, 100 கிராம் கஞ்சா, ரூ. 31 ஆயிரத்து 500 பணம், எடை இயந்திரம், 20 ஜிப் லாக் கவர்கள் மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பிரணாஸ், சாய் பிரசாந்த் ஆகியோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ