உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நேஷனல் மாடல் கல்விக்குழும செயலாளருக்கு அச்சீவர்ஸ் விருது

 நேஷனல் மாடல் கல்விக்குழும செயலாளருக்கு அச்சீவர்ஸ் விருது

கோவை, நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் செயலாளர் உமா மோகனுக்கு சென்னையில் நடந்த நிகழ்வில் 'பெமினா அச்சீவர்ஸ் சவுத்-2025' என்ற விருது கல்வித்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில், மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விருதை வழங்கிக் கவுரவித்தார். கடந்த 2000ம் ஆண்டு நேஷனல் மாடல் கல்வி குழுமத்தின் செயலாளராகப் உமா மோகன் பொறுப்பேற்றார். குழுமத்தின் தலைவர் மோகன்சந்தருடன் இணைந்து, 1987-ல் ஒரே ஒரு பள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது கோவை, கருமத்தம்பட்டி, உடுமலைப்பேட்டை மற்றும் கோத்தகிரி என 7 வளாகங்களைக் கொண்ட கல்விக்குழுமமாக வளர்ந்துள்ளது. இக்குழுமத்தின் கீழ், 1987 ல் துவக்கப்பட்ட நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2006 ல் துவக்கப்பட்ட நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி, 2015ல் கோத்தகிரியில் ஐ.ஜி.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் துவக்கப்பட்ட நேஷனல் மாடல் பள்ளி, உள்ளிட்டஏழு வளாகங்கள் செயலாளர் உமா மோகனின்தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது, 7000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், என நேஷனல் மாடல் கல்விக்குழுமம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ