உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எச்சரிக்கை! துணை போகும் போலீசாருக்கும் சிக்கல்

விபச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எச்சரிக்கை! துணை போகும் போலீசாருக்கும் சிக்கல்

கோவை: 'மாநகரில் விபச்சாரம் செய்வோர் மற்றும் அதற்கு துணைபோகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் எச்சரித்துள்ளார்.கோவை மாநகர பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த துணை கமிஷனர்கள் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.எனினும் சில பகுதிகளில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரிந்திருந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக துணை கமிஷனர் தேவநாதனுக்கு தகவல் சென்றது. மேலும், தற்போது, கோவையில் அதிகரித்துள்ள ரெஸ்டோ பார், பப்களிலும் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. பல ரெஸ்டோ பார்கள், பப்களில் பெண்களுக்கு இலவசமாக மது அளிக்கின்றனர். இதனால், மது போதையில் இருக்கும் பெண்களை பாலியில் துன்புறுத்தல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதனிடம் கேட்டபோது, ''மாநகரில் விபச்சாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபசாரம் நடைபெறும் இடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. ''மேலும் இதற்கு துணை போகும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளேன். ''ஒரு சில இடங்களில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மூன்று போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரம் நடக்கிறதோ அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 09, 2025 16:49

ஏற்கனவே கட்டுப்பாட்டு அறையில் இருந்து புதிதாக வந்தவர்களுக்காக மாற்றப்பட்ட மூன்று பேர்களையும் ...க்கு உதவியா இருக்குற இடத்துக்குத்தானே மாத்தி இருக்கீங்க கோப்பால்


செல்வஜோதி
பிப் 09, 2025 10:35

கலியாணம் கட்ட பொண்ணே கிடைக்க மாட்டேங்குது ஆப்பீசர். ஏதாவது வழி பண்ணுங்க ஆப்பீசர். நல்லா படிச்சு வேலையில் இருக்குறவங சொல்றாங்க.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 09, 2025 13:22

வெரி கரெக்ட். படிக்காத, வேலை இல்லாத வெட்டிப் பசங்களைத் தான் தமிழ் நாட்டுப் பெண்களில் பெரும்பாலோர் விரும்புகிறார்கள். அவனுங்களோட ஊர் சுத்தறது, பீச், பார்க், புதரில் ஒதுங்குவது, லாங் டிரைவ், டூர் போறது. "நல்லா படிச்சு வேலையில் இருக்குறவங்களால் படிப்பு, வேலையை விட்டு விட்டு மேற்படி காரியங்கள் செய்ய நேரம் இல்லாததால் பெண் கிடைப்பதில்லை. மேற்படி விஷயங்கள் செய்வாதால் பெரும்பான்மை பெண்கள் "கல்யாணம் தேவையில்லை" என்று சொல்லி விட்டு சுற்றுகிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
பிப் 09, 2025 08:58

நீங்க ஒரு ஆளு வேலை செய்வதால் மட்டும் எல்லாம் change ஆகிவிடாது தேவநாதன்


Muruganandam
பிப் 09, 2025 07:03

கட்டுபாட்டு அறைக்கு மாற்றுவது கடுமையான நடவடிக்கயா?


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 09, 2025 13:43

அந்த அறையில் கேமிரா கிடையாதாம். மேற்படி வேலைக்கும் இடைஞ்சல் இருக்காதாம் .


புதிய வீடியோ