மேலும் செய்திகள்
நகராட்சி பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?
02-Apr-2025
மூடப்பட்ட கழிப்பிடம் பயணிகள் பாதிப்பு
28-Apr-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, கோமங்கலத்தில் கழிப்பிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை துாய்மை செய்ய ஆள் இல்லாத காரணத்தினால், சுகாதாரமின்றி உள்ளது.மேலும், கழிப்பிடத்தை சுற்றி குப்பையும், புதரும் சூழ்ந்து காணப்படுகிறது. இதை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* நாயக்கன்பாளையம் பகுதி விவசாயிகள் சிவபூபதி, பிரமேத் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எங்களது தோட்டத்தில் கழிவுநீர் பாதை, குடிநீர் குழாய் லைன் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றி தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதில், தார் சாலை அமைத்தால் குஞ்சிபாளையம் கிராம மக்களுக்கு மழைநீர் வடிகால் வசதி இல்லை. இந்த ரோட்டின் வடபுறத்தில், 15 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
02-Apr-2025
28-Apr-2025