உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

 விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

கோவில்பாளையம்: காளப்பட்டியில் தோட்டக்கலை மாணவியர், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை இறுதியாண்டு மாணவியர் கிராமப்புறத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். தங்களது விரிவாக்க கல்வி பயிற்சியின் ஒரு பகுதியாக, கத்திரியில் ஒட்டு கட்டுதல் குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். காளப்பட்டியில் விவேகானந்தர் தோட்டத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. எஸ்.எஸ்.குளம் வட்டார தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ