உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு

மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு

சூலுார்; மாதப்பூர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டி தர கோரி, எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.கரவழி மாதப்பூர் ஊராட்சி பொது நிதியில் இருந்து, அண்ணா நகரில் குடிநீர் தொட்டி கட்டுதல், பெருமாள் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் கட்ட முடிவானது. எம்.பி., ராஜ்குமார் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாதப்பூர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரி, எம்.பி., யிடம் மனுக்கள் அளித்தனர். புதிய கட்டடம் கட்டி தர உரிய முயற்சி எடுப்பதாக எம்.பி., உறுதி அளித்தார். நிர்வாகிகள் முருகேசன், மன்னவன், ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஜெயக்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை