உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுார் - ஹோப் காலேஜ் வழித்தடத்தில் கூடுதல் பஸ் வேண்டும்

அன்னுார் - ஹோப் காலேஜ் வழித்தடத்தில் கூடுதல் பஸ் வேண்டும்

அன்னுார்; 'கூடுதல் பஸ் இயக்க கோரி, 10 முறை மனு கொடுத்தும் பயனில்லை,' என மாணவ மாணவியரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அன்னுார் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் காளப்பட்டி, நேரு நகர், பீளமேடு, ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் துணை மருத்துவக் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர் . அன்னுாரில் இருந்து காந்திபுரம் சென்று பின்னர் ஹோப் காலேஜ், பீளமேடு, காளப்பட்டி ஆகிய இடங்களுக்கு இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு பதில் தினமும் காலை 7:00 மணிக்கு 45 சி என்னும் அரசு டவுன் பஸ் அன்னூரில் இருந்து கோவில்பாளையம், குரும்பபாளையம், காளப்பட்டி, நேரு நகர், பீளமேடு, ஹோப் காலேஜ் வழியாக காந்திபுரம் செல்கிறது. இந்த பஸ் இந்த வழித்தடத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கு மிகவும் உதவியாக உள்ளது. எனினும் இதில் 150 பேர் பயணிக்கின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ''காலையில் இந்த பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாய பயணம் செல்கின்றனர். அன்னுார் அரசு போக்குவரத்துக் கழக கிளையிலும் கோவை கலெக்டர் அலுவலகத்திலும் என பத்து முறை மனு கொடுத்து விட்டோம்.அபாய முறையில் பயணிக்கும் மாணவர்களுக்கு விபரீதம் ஏற்படும் முன் காலையில் இதே வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பஸ் இயக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை