மேலும் செய்திகள்
3000 ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் சக்கரபாணி
29-Jun-2025
வால்பாறை; வால்பாறையில், யானையிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை, கன்டெய்னர் கடைகளாக மாற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரை தவிர பிற எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. யானைகளின் தொந்தரவால், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதத்தில் ஒரு நாள் திறந்தவெளியில் வைத்து ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், வால்பாறையில் முதல் கட்டமாக நான்கு ரேஷன்கடைகள் கன்டெய்னர் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான எஸ்டேட்களில் ரேஷன் கடைகள் திறக்க முடியாத நிலையில் உள்ளது. யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்துவதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாடும் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் கன்டெய்னர் ரேஷன் கடைகளாக மாற்ற வேண்டும். அப்போது தான், மக்கள் நாள் தோறும் ரேஷன் பொருட்களை பெற முடியும். இவ்வாறு, கூறினர்.
29-Jun-2025