உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிறைவு பெற்றது ‘முகவரி’ கண்காட்சி

நிறைவு பெற்றது ‘முகவரி’ கண்காட்சி

கோவை: யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில், கொடிசியா தொழில் வர்த்தக காட்சி மையத்தில் நடந்து வந்த முகவரி, நலம் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, வீடு கட்டவும், நிலம் வாங்கவும் வங்கி கடன் வாங்கவும் சிறப்பு வட்டி விகிதத்தில் கடனுதவி குறித்து விளக்கம் அளித்தது. கார் கடன், தனி நபர் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காட்சிப்படுத்தியிருந்தது. கோவையில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான தொழில் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்திருந்தன. அரங்குகளில் பதிவு செய்தோருக்கு சிறப்பு சலுகைகளையும் அளித்தன. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில், இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, கண், காது, உள்ளிட்ட பல பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !