உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அடிசியா டெவலப்பர்ஸின் அலர்ட் கோவை பிரசாரம்

 அடிசியா டெவலப்பர்ஸின் அலர்ட் கோவை பிரசாரம்

கோவை: பாதுகாப்பான ரியல் எஸ்டேட் வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸின் 'அலர்ட் கோவை' விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டது. அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது: பெரும்பாலான மக்களுக்கு பட்டா, ரெரா குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எந்த ஒரு சொத்திலும், முதலீடு செய்வதற்கு முன் வீடு வாங்குபவர்கள், ரெரா பதிவை சரிபார்க்க வலியுறுத்துவதே, இப்பிரசாரத்தின் நோக்கம். எங்கள் பிரசாரத்தில், க்யூ.ஆர். கோடு உள்ளது. அதன் மூலம் ரெராவின் அதிகார இணையதளமான www.tnrera.inல் உள்ள திட்டங்களை சரிபார்ப்பதற்கான வழிகளை காட்டுகிறது. நேர்மை, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்புக்கான உறுதிபாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. வழிகாட்டுதல்களை பெற, adissia.comஅல்லது 89259 96561 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யலாம். கோவையில் முதற்கட்டமாக, நீலாம்பூர், ஹுசூர் ரோடு ஆகிய இரு இடங்களில் விழிப்புணர்வு மையங்களை ஏற்படுத்த உள்ளோம். சொத்து வாங்குவது குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் எங்கள் நிபுணர்கள் தீர்வு வழங்குவர். இவ்வாறு, அவர் கூறினார். தலைமை வருவாய் அலுவலர் சிவகுமார், நிர்வாக குழு இயக்குனர் செந்தில் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ