உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆதித்யா சர்வதேச பள்ளி ஆண்டு விழா போட்டிகள்

 ஆதித்யா சர்வதேச பள்ளி ஆண்டு விழா போட்டிகள்

கோவை: ஆதித்யா சர்வதேசப் பள்ளியின், 12வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் போட்டிகள், கலைநிகழ்வுகளுடன் விமர்சையாக நடந்தது. ஆதித்யா சர்வதேச பள்ளி தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் பத்ம ஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம் பங்கேற்று, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து பேசினார். மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. போட்டிகளில் முதலிடம் வகித்த மாணவர்களுக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் கீர்த்தனா, நிர்வாக அறங்காவலர் விஜய் குணசேகரன், ஆதித்யா குளோபல் பள்ளி தாளாளர் பிரவின், தலைமையாசிரியர் அத்யா பர்வின் பாபி தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ