உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நிர்வாகிகள் பொறுப்பேற்பு

 நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோவை: மெட்ராஸ் வேளாண் மாணவர்கள் சங்கம் (மாசு) 115 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 'மாசு'வில் எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானிகள் உறுப்பினராக இருந்துள்ளனர். தற்போது, 750 வாழ்நாள் உறுப்பினர்களும், 6,500 மாணவர் உறுப்பினர்களும் இச்சங்கத்தில் உள்ளனர். 2026ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில், காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில், தலைவராக தேர்ந்தெடுக்கப்ப்டடார். தாவர நோயியல் இணைப் பேராசிரியர் கார்த்திகேயன் துணைத் தலைவர், மண் மற்றும் நீர் பாதுகாப்பு பேராசிரியர் பாலாஜி கண்ணன் பொருளாளர், சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் பூமிராஜ் செயலாளர், புள்ளியல் பே ராசிரியர் கங்கைச் செல்வி இணைச் செயலாளர், உதவிப் பேராசிரியர் ராஜன்பாபு செய்தி ஆசிரியராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை