மேலும் செய்திகள்
விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு
27-Sep-2025
மா தம்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, விஸ்வன்கர் பப்ளிக் பள்ளி. இதன் நிர்வாகத்தினர் கூறியதாவது: இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் எங்கள் பள்ளி அமைந்துள்ளது. மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ளது. விஜய தசமி முன்னிட்டு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விஜய தசமி நாளில் குழந்தைகள் பள்ளிகளில் முதல் எழுத்தையோ, படிப்பையோ துவக்குவது கல்வியில் சிறந்து விளங்க உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை வெளிப்படுத்தும் செயல்பாட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, கால்பந்து, கபடி மற்றும் தனியாள் விளையாட்டு, குழு விளையாட்டு, வில்வித்தை போன்றவை பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் கணிதத்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், அபாகஸ் வகுப்பு, கணினிப்பிரிவில் ஏஐ மற்றும் ரோபோட்டிக் வகுப்புகளும் நடத்துகிறோம். மாதம்பட்டி மற்றும் செல்வபுரத்தில் உள்ள எங்கள் பள்ளிகளில், விஜயதசமி முன்னிட்டு அக்., 2 ம் தேதி, காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை, வித்யாரம்பம் பூஜை மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தொடர்புக்கு, 84385 78141 மற்றும் www.vishwankarsvhool.comஇவ்வாறு, அவர்கள் கூறினர்.
27-Sep-2025