அ.தி.மு.க., ஆண்டு விழா
பொள்ளாச்சி : தமிழகத்தில் அ.தி.மு.க., துவங்கி, 53 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து,பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* வால்பாறை நகர கழகத்தின் சார்பில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர்.நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் நடந்த விழாவில், துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன், அவைத்தலைவர் சுடர்பாலு, வார்டு செயலாளர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.