உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்துக்கு வழி வகுக்கும் வேகத்தடை முன்கூட்டிய அறிய அறிவிப்பு தேவை

விபத்துக்கு வழி வகுக்கும் வேகத்தடை முன்கூட்டிய அறிய அறிவிப்பு தேவை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ராசக்காபாளையம் அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை உள்ள நிலையில், வாகன ஓட்டுநர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி, வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சின்னேரிபாளையம் வரை, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.சாலைகளில் சிறிய அளவிலான வேகத்தடைகள் வர்ணம் பூசி, தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து, விபத்துகள் ஏற்படாத வகையில் பராமரிக்கப்படுகிறது.அதேநேரம், சில பகுதிகளில், சாலை சந்திப்பு, வேகத்தடை உள்ளதை முன்கூட்டியே வாகன ஓட்டுநர்களுக்கு அலர்ட் செய்யும் வகையிலான அறிவிப்பு பலகைகள் வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ராசக்கா பாளையம் அடுத்துள்ள சாலை விபத்து பகுதியாக இருப்பதால், அங்குள்ள வளைவு ஒட்டி பெரிய அளவிலான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டுநர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: வழக்கமாக, நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க தடை விதிக்கப்படும். அவ்வாறு, இருக்கையில், தனியாருக்கு ஆதரவாக சில பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்படுகிறது.அதற்கு மாறாக, தேவையான இடங்களில் அறிவிப்பு பலகை வைப்பதுடன், சந்திப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில், அதிகாரிகளின் கண்காணிப்பு இருத்தல் அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை