காருண்யா பல்கலையில் 33வது பட்டமளிப்பு விழா
கோவை: காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிக பிரிவுத் தலைவர் வேலுசாமி மாணவர்களிடையே பேசுகையில், '' கற்றல், வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம். தொழில்நுட்ப உதவியால் மனிதகுல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், '' என்றார். முன்னதாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. காருண்யா நிகர்நிலை பல்கலை வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் ஆண்டறிக்கை வாசித்தார். காருண்யா துணைத் தலைவர் பால் தினகரன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.