தேர்தல் குறித்து ஆலோசனை
பொள்ளாச்சி: பா.ஜ., கோவை தெற்கு மாவட்டம், மாவட்ட, நகர புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், பல்லடம் ரோடு, தனியார் ஓட்டல் அரங்கில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் சந்திரசேகர், நகரத் தலைவர் கோகுல்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் துரை, மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.