உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொய்யாவில் நுாற்புழுவை கட்டுப்படுத்த அறிவுரை

கொய்யாவில் நுாற்புழுவை கட்டுப்படுத்த அறிவுரை

கிணத்துக்கடவு; கொய்யா மரங்களில் ஏற்படும் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஒரு சில விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்கின்றனர். சிலர் வீடுகளில் கொய்யா செடி வளர்க்கின்றனர். இதில், நூற்புழு தாக்குதலால், இலைகள் பழுப்பு நிறமாகி சுருண்டு காணப்படும். வேர் பகுதிகளில் வேர் முடிச்சுகள் அதிகம் காணப்படும். மேலும், வேர்கள் கருப்பு நிறமாக மாறி அழுகி காணப்படும்.இதை கட்டுப்படுத்த, பர்புரியோசிலியம் லிசாசினம் மற்றும் பொக்கோனியா கிளோமிடோஸ்போரியா என்ற உயிரினக் கலவையை தொழுஉரத்துடன் கலந்து, 15 நாட்களுக்கு நிழலில் வைத்து நீர் தெளிக்க வேண்டும்.இதை மரத்துக்கு, 500 கிராம் என்ற வீதத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இடவேண்டும். இவ்வாறு செய்தால் நூற்பழுவை கட்டுப்படுத்தலாம், என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ