உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை டானிக் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

தென்னை டானிக் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கூறுகையில்,' தென்னை டானிக் பயன்படுத்துவதால், தென்னை ஓலைகளில் பச்சையம் அதிகரிப்பதால், சிறந்த முறையில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று, தென்னை மரம் சிறப்பாக வளர உதவுகிறது. மரத்தின் உயிர் தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது. நல்ல மகசூல் கிடைக்கிறது. தேங்காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவு, 24 சதவீதம் அதிகரிக்கிறது. தென்னை மரத்தில் நுண் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல், நல்ல மகசூல் கிடைத்து அதிக லாபம் ஈட்ட முடியும். குறைந்த செலவுடன் கூடிய அதிக லாபம் கிடைக்கும். தென்னை டானிக் தென்னை மரங்களுக்கு வேர் வாயிலாக கட்டித் தரப்படுகிறது. அதற்கு தேவையான ஆட்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தென்னை டானிக் மருந்துகளும், தேவையான கயிறு, கவர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. தேவை படக்கூடிய விவசாயிகள் தங்களின் பெயர்களை பதிவு செய்து, பயன்பெறலாம் என, இந்நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை