மேலும் செய்திகள்
நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம்
23-Oct-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில், 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. இதில், பல்வேறு வகையான பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டு, ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வெட்டப்படுகிறது. கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆங்காங்கே, தென்னை மரத்தின் தண்டு பகுதியில் வெடிப்பும் உண்டாகி, வாடல் நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், தண்ணீர் பாய்ச்சும் போது நோய் தாக்குதல் ஏற்பட்ட மரத்தில் இருந்து அடுத்த மரத்துக்கு தண்ணீர் செல்வதை தடுக்க வேண்டும். அதன்பின், கான்டாப் அல்லது ஹக்சகோசோல் 10 மில்லியை, 100 மில்லி தண்ணீர் உடன் கலந்து வேரில் செலுத்த வேண்டும். நோய் தாக்குதலுக்கு வேரில் மருந்து செலுத்திய மரத்தில், 45 நாட்களுக்கு இளநீர் மற்றும் தேங்காயை தவிர்க்க வேண்டும். மரத்தை சுற்றிலும், 200 கிராம் டி.விரிடியை, 10 கிலோ குப்பை மண்ணுடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.
23-Oct-2025