மேலும் செய்திகள்
சுரைக்காய் சாகுபடிக்கு வழிகாட்டுதல்
30-Sep-2024
ஆனைமலை : 'ஆனைமலையில், தென்னந்தோப்புகளில், மழைநீர் அதிகளவு சேராமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால், தென்னந்தோப்புகளில், மழைநீர் அதிகளவு தேங்கினால், வேர் அழுகல் நோய் ஏற்படும். அதில் இருந்து மீட்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:தென்னையில், 23 ஆயிரம் ெஹக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழை, 120 ெஹக்டேர், ஜாதிக்காய், 400 ெஹக்டேர் மற்றும் கோகோ, 100 ெஹக்டேரில் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.தற்போது, மழை சீராக பெய்யாமல் அதிகளவு பெய்வதால், தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதில், வாழை பயிர் சாகுபடி செய்து, 3 - 5 மாதங்களாகின்றன. அவற்றுக்கு பூஞ்ஞான கொல்லியான காப்பரைசடு குளோரைடு, 2 கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து வாழையை சுற்றி தெளித்தால் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம்.ஜாதிக்காய், கோகோ போன்றவை அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளதால், உடனடியாக காய்களை அறுவடை செய்யலாம். தென்னந்தோப்புகளில், வடிகால் வசதியை ஏற்படுத்தினால், நீர் தேங்காமல் செல்லும். இதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
30-Sep-2024