மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
07-Nov-2024
வால்பாறை; கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆதிதிராவிட நலக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.வால்பாறையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆதிதிராவிட நலக்குழு ஆலோசனை கூட்டம், ஆதிதிராவிட நலக்குழு மாநில செயலாளர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.மாநில துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிட நலக்குழு மாநில இணை செயலாளர் ஆறுச்சாமி வரவேற்றார்.கூட்டத்தில், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைத்தலைவரும், அமைச்சருமான மதிவேந்தன் பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை இப்போதே துவங்க வேண்டும். கட்சிப்பணிகளை நிர்வாகிகள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி, ஓட்டு சேகரிக்க வேண்டும். குறிப்பாக, இளம் வாக்காளர்களை வசப்படுத்த கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பாடுபட வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், வால்பாறை தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், துணை அமைப்பாளர் ரவிசந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
07-Nov-2024