உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை

உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை

பெ.நா.பாளையம்; பயிர்கள் நன்கு ஆரோக்கியமாக வளர உரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.எந்தெந்த பயிருக்கு எவ்வகையான உரம் இடவேண்டும் என்பது குறித்தான அட்டவணையை வகுத்து, அதன்படி செயல்பட வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்க கூடாது. மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும்.உரமிட்ட ஒரு வாரத்துக்குள் அதிகமாக நீர் பாய்ச்சுவதோ அல்லது நீர் தேங்கி இருப்பதோ கூடாது. நீர் வடிந்த பிறகு மற்றும் களை எடுத்த பின் மேல் உரம் இடவேண்டும். அமில மண்களை சுண்ணாம்பு பொருட்களுடன் தேவைக்கு ஏற்ப நேர்த்தி செய்ய வேண்டும். அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை இடும்போது மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இடவேண்டும். தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்துதல் முறைகளை செயல்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ