உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை

குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை

பொள்ளாச்சி; அங்கன்வாடிகளில், குழந்தைகளுக்கு, சளி, இருமல் என நோய் பாதிப்பு ஏற்பட்டால், டாக்டரை அணுகி சிகிச்சை பெற, பெற்றோர் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில், 99 அங்கன்வாடி மையங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.தற்போது, சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சளி, இருமல் காரணமாக பலரும் பாதிக்கின்றனர். அவ்வகையில், குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.பி.எஸ்.கே., சுகாதார குழுவினருக்கும் தகவல் தெரிவித்து, சிகிச்சை அளிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:அங்கன்வாடி குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, வெயிலின் தாக்கம் இருப்பதால், நோய் பாதிப்பு ஏதும் இருக்காது. குழந்தைகளுக்கு, காய்ச்சிய குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை