உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பாதிப்பு; பிரச்னை சரியாக சில நாட்களாகும்

பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பாதிப்பு; பிரச்னை சரியாக சில நாட்களாகும்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில், நகரப்பகுதியில் உள்ள பதிவுகளை மேற்கொள்ள முடியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில், சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு, வில்லங்கசான்று போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, 'ஆன்லைன்' பிரச்னை காரணமாக, பதிவுகள் மேற்கொள்ள முடியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில், பத்திரங்களை பதிவு செய்வதற்கு அனைத்து விதமான ஆவணங்களை தயார்படுத்தி, 'ஆன்லைன்' டோக்கன் எடுக்கப்படுகிறது.சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு வந்தால், 'சர்வர்' பிரச்னை என்கின்றனர். எப்போது சரியாகும் என தெரியாததால் பதிவுக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக பல மணி நேரம் தயாராகும் வரை காத்திருக்கும் சூழல் நீடிக்கிறது.பத்திரப்பதிவுக்காக வெளியூர்களில் இருந்து வருவோர், காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதை உடனடியாக சரி செய்து கொடுத்தால் பயனாக இருக்கும். அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.சப்-ரிஜிஸ்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள பதிவுகள் மட்டும் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக, நத்தம் பட்டா, 'அப்டேட்' பணிகள் நடக்கின்றன.கடந்த வாரம் கிணத்துக்கடவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, பொள்ளாச்சி பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. பதிவு செய்வதில் சிரமம் உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை