சோலாரில் மினி டிராக்டர் ஆராய்ச்சி செய்ய ஒப்பந்தம்
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலை உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும், வி.ஆர். பூம் சார்ஜ் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி, வி.ஆர். பூம் சார்ஜ் நிறுவனம், வேளாண் தொழில்நுட்பத் துறையில், மின்சாரம் மற்றும் சோலார் உதவியுடன் இயங்கக் கூடிய மினி டிராக்டர்கள், உழவோட்டும் கருவிகள் மற்றும் வேளாண் பயன்பாட்டு டிரோன்களை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.