மேலும் செய்திகள்
நறுமண பயிர்கள் சாகுபடி செயல் விளக்கம்
25-Aug-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் விவசாய செயல் விளக்க கூட்டம் நடந்தது. வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், காருண்யா பல்கலை வேளாண் மாணவர்கள் விவசாய செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் குரும்பை உதிர்வதை தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், பூண்டு விதை நேர்த்தி செய்து, 3ஜி கரைசல் எனும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தயாரிப்பு ஆகியவை குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர். பின்னர் விவசாயிகள் விழிப்புணர்வுக்காக சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து பேரணி சென்றனர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் நாமத்துல்லா, வேளாண்மை அலுவலர் கோமதி, உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Aug-2025