உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் மறு உருவாக்கம் விவசாயிகள் சந்திப்பு

வேளாண் மறு உருவாக்கம் விவசாயிகள் சந்திப்பு

பெ.நா.பாளையம் : சின்னதடாகத்தில் இயற்கையை போற்றும் விவசாயிகளின் களமான வேளாண் மறு உருவாக்கம் குறித்த ஜனனி உயிர் சூழலியல் கூட்டம் நடந்தது.விவசாயம் மறு உருவாக்கம் என்பது பண்ணை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டு எடுக்கவும், மேம்படுத்தவும் முயற்சிக்கும் விவசாயத்திற்கான ஒரு அணுகுமுறையாகும். இது பண்ணை பல்லுயிர்களை அதிகரிக்கிறது மற்றும் செயல்பாட்டில் நீர் மேலாண்மையை மேம்படுத்துகிறது. இது பயன்படுத்தப்படும் வளங்களை குறைப்பதை விட, அவற்றை மேம்படுத்துகிறது எனலாம்.காங்கேயம் ஜனனி குரூப் சார்பில் நடந்த இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் மறு உருவாக்கம் தொடர்பாகவும், பாரம்பரிய விதைகளை காப்பது குறித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பாரம்பரிய விதைகள் தொடர்பான கண்காட்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி