உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் ஸ்டார்ட் அப் 1 கோடி ரூபாய் மானியம்

வேளாண் ஸ்டார்ட் அப் 1 கோடி ரூபாய் மானியம்

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ரூ.1.30 கோடி மானியம் வழங்கப்பட்டது.மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவியுடன் தொழில்நுட்ப வணிக காப்பகம், 2011 முதல் கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், வேளாண் சார்ந்த தொழில்முனைவோர், விவசாயிகள், மாணவர் தொழில்முனைவோருக்கு, வழிகாட்டி வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிதியுதவிகளை, இம்மையம் பெற்றுத் தருகிறது. மத்திய அரசின் வேளாண் அமைச்சக திட்டங்களின் கீழ், வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்கப்பட்டது.துணைவேந்தர் கீதா லட்சுமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.81.60 லட்சம் மானியம் வழங்கினார். நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் சோமசுந்தரம், சி.இ.ஓ., ஞானசம்பந்தம், வணிக காப்பக செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி