உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை

வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை

கிணத்துக்கடவு: கோதவாடி ஊராட்சி அலுவலக வளாகத்தில், அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிணத்துக்கடவு, அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் தற்போது ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில், கோதவாடி ஊராட்சி அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு ஊரக பகுப்பாய்வு பங்கேற்பு கூட்டம் நடந்தது. இதில், பயிர்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், பயிர்கள் சார்ந்த கால அட்டவணைகள் வரைந்து விவசாயிகளுக்கு தெளிவாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் விளையும் பயிர்கள், மண்ணின் தன்மை உள்ளிட்டவர்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். இதன் வாயிலாக, கிராமத்தில் உள்ள வளங்கள் மற்றும் காலநிலை சார்ந்த மாற்றங்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ