உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை சான்றிதழ் சரிபார்ப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வேளாண் பல்கலை சான்றிதழ் சரிபார்ப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை அறிவியல் மாணவர் சேர்க்கையில் சான்றிதழ் சரிபார்ப்பையொட்டி, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி அறிக்கை:பொதுக் கல்விப் பிரிவு இட ஒதுக்கீட்டில் 4,765 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் 2,516, தனியார் கல்லூரிகளில் 2249 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.முதல்கட்ட கவுன்சிலிங் மூலம் தரவரிசை, விருப்பப்பாடம், சாதி அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தற்காலிகமாக தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள், வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.தற்காலிகமாக தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் பல்கலை வளாகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, காலியிடமாகக் கருதப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் செலுத்துவது கட்டாயம்.அசல் கல்விச் சான்றிதழ்களான 10ம் வகுப்பு பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை, வேளாண் பல்கலைக்கழக வளாக, அண்ணா அரங்கத்தில் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டு காலியிடமாக கருதப்படும்.மேலும் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி