வேளாண் பல்கலை கவுன்சிலிங் இட ஒதுக்கீடு
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் நடப்பு கல்வியாண்டுக்கான இளநிலை அறிவியல் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு சேர்க்கை துவங்கியுள்ளது. இதுவரை பங்கேற்காத சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினர் வரும் 23ம் தேதி நேரில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வேளாண் பல்கலை அறிக்கை:விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளி சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.விளையாட்டு வீரர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்கள், வரும் 23ம் தேதி கடைசி வாய்ப்பாக, வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் பங்கேற்கலாம். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சார்புச் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான தேதியும் வரும் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.