மேலும் செய்திகள்
பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ எண் அவசியம்
04-Nov-2025
பெ.நா.பாளையம்: தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் பிப்., 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நான்கு மாதத்துக்கு ஒருமுறை தலா, 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 6000 ரூபாய், 3 தவணைகளில் சொந்தமாக விவசாயம் நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக, விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடி பண பரிமாற்றம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பி.எம். கிசான் பயனாளிகள் வரும் காலங்களில் தவணைத் தொகை பெற, தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என, ஏற்கனவே உறுதியாக தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு அல்லது பொது சேவை மையத்தின் வாயிலாகவோ தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம். எனவே, பி.எம். கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட, இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள், தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை அறிவித்துள்ளது.
04-Nov-2025