ஏ.ஐ., எதிர்காலம் அல்ல இதுவே நிகழ்காலம்
கோவை: எஸ்.என்.எஸ்., கல்லூரியின் இன்னோவேஷன் ஹப்பில், புதிய 'ஸ்டார்ட் அப் கலாப் ஸ்பேஸ் மையம்' திறக்கப்பட்டது.தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மையத்தை திறந்துவைத்தார்.புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் பங்கேற்று, புதிய சிந்தனைகளை ஏ.ஐ., தொழில் முனைவாக மாற்றுவது குறித்து கலந்துரையாடினர்.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''புதுமை முயற்சிகள் சென்னையைப் போன்ற நகர மையங்களில் மட்டுமே அமையக்கூடாது. கோவை முதல் மதுரை, திருநெல்வேலி, சேலம் வரை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள திறமைகளை ஊக்குவித்து, உலகத் தரத்தில் போட்டியிடக்கூடிய, ஸ்டார்ட் அப் களை உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் அல்ல, நிகழ்காலம். இந்த துறையில் நாம் முன்னணியில் இருப்பது அவசியம்,” என்றார்.எஸ்.என்.எஸ் இன்னோவேஷன் ஹப் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், தலைமை நிர்வாக அதிகாரி மோகன் நாராயணன், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.