உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருங்காலங்களில் ஏ.ஐ., ஆதிக்கம்; மாணவர்கள் திறமை வளர்ப்பது அவசியம்

வருங்காலங்களில் ஏ.ஐ., ஆதிக்கம்; மாணவர்கள் திறமை வளர்ப்பது அவசியம்

கோவை; 'அடுத்த இரு ஆண்டுகளில் 40 சதவீத பணிகளை, செயற்கை நுண்ணறிவு பிடித்துக் கொள்ளும். அதற்கு தகுந்தாற் போல், திறமைகளை வளர்ந்துக் கொள்ள வேண்டும்' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் துவங்கி நடந்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா ஐ.டி.ஐ.,யில்நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் கருணாகரன் பேசியதாவது:உலகளவில் தொழில் நுட்பம் இன்று, வேகமாக வளர்ந்து வருகிறது. உங்களிடம் இருக்கும் திறன்களை வெளிப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது, புதிய திறன்களை கற்றுக்கொள்வது என, இவை தான் புதிய வேலை வாய்ப்புகளுக்கு தாரக மந்திரமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 40 சதவீத பணிகளை, செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.,) மற்றும் ஆட்டோ மிஷன் பிடித்துக் கொள்ளும். எனவே, ஒவ்வொருவரும், புதிய, புதிய விஷயங்களை தினமும் கற்றுக் கொள்ள வேண்டும். ரயில்வேயில் லோகோ பைலட் விண்ணப்பத்துக்கு கடைசி தேதி, கடந்த 15ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பலரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. தற்போது, ரயில்வேயில், பல்வேறு தொழில்நுட்பப் பணிகளுக்கு ஆட்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ., மாணவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பெற்ற, படித்து முடித்த மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை