உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனித ஆற்றலை ஏ.ஐ. மேம்படுத்தும்

மனித ஆற்றலை ஏ.ஐ. மேம்படுத்தும்

கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் (கே.ஐ.டி.,) 'கணினி மற்றும் தொழில்துறை புரட்சி' என்ற பெயரில், இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. சிறப்பு விருந்தினர் சத்காம்.ஒ.ஆர்.ஜி. இணை நிறுவனர் நயன் ஜடேஜா பேசுகையில், ''ஏ.ஐ. மனித நுண்ணறிவை மாற்றாது; அதை பெருக்கி வருகிறது. மனித ஆற்றலை மேம்படுத்தும் ஒரு வினையூக்கியாக மாணவர்கள்பார்க்க வேண்டும்,'' என்றார். கியூன்பே மற்றும் ஷாப்டிமைஸ் நிறுவனங்களின், முன்னாள் உலகளாவிய தலைவர் அபிஜித் பிடே கூறுகையில், ''தொழில்நுட்பத்தின் உண்மையான பலம் ஆட்டோமேஷனில் மட்டுமல்ல, நிஜ உலக சவால்களை எதிர்கொள்வதிலும் உள்ளது,'' என்றார். கல்லுாரியின் நிறுவன தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன் தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, டீன்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை