உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க.வினர் கலெக்டருக்கு மனு

அ.தி.மு.க.வினர் கலெக்டருக்கு மனு

வால்பாறை; வால்பாறையில் நிலவும் மனித - வனவிலங்கு மோதலுக்கு தீர்வு காணக்கோரி, அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை ஏ.டி.பி. (அ.தி.மு.க.) தொழிற்சங்க தலைவர் அமீது, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறையில், வன விலங்கு - மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் விளையாடக்கூட முடியாத நிலை உள்ளது. சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு போன்ற வன விலங்குகளால் உயிர்பலியாவதை தடுக்க வேண்டும். வனவிலங்கு - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றி உள்ள புதரை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை