மேலும் செய்திகள்
பழனிசாமிக்கு வரவேற்பு
07-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில், பொள்ளாச்சிக்குவந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பண்ணசாமி, சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகர பொருளாளர் கனகராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜ்கபூர், நகர அவை தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நகர ஜெ.பேரவை தலைவர் மணி, ஜெ. பேரவை மாவட்ட இணை செயலாளர் மாரிமுத்து வரவேற்றனர். கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, எம்.ஜி.ஆர். தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி, தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
07-Sep-2025