உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து பஸ் டயரால் நசுக்கி அழிப்பு

ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து பஸ் டயரால் நசுக்கி அழிப்பு

மேட்டுப்பாளையம்: காரமடையில், தனியார் பஸ்களில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வு மேற்கொண்டு, 'ஏர் ஹாரன்களை' அகற்றி அபராதம் விதித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில், தனியார் பஸ்களில் விதிகளுக்கு புறம்பாக அதிகம் சத்தம் தரக்கூடிய, ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில், அரசு போக்குவரத்து கழக பொறியாளர் எபிநெசர், வட்டார போக்குரத்து அலுவலர்கள் பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வில் இறங்கினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை நிறுத்தி, ஆய்வு செய்ததில் 6 பஸ்களில் ஏர் ஹாரன் இருந்தது.அவற்றை அகற்றி, பஸ் டயர் அடியில் வைத்து நசுக்கப்பட்டது. 6 தனியார் பஸ்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை