உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரஷர்களிலிருந்து உருவாகிறது காற்று மாசு ; நடக்கிறது ஆய்வு

கிரஷர்களிலிருந்து உருவாகிறது காற்று மாசு ; நடக்கிறது ஆய்வு

மதுக்கரை: பாலக்காடு ரோடு மைல்கல் சுகுணாபுரத்திலிருந்து துவங்கும் மேற்கு புறவழிச்சாலையில், குடியிருப்புகள், கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளன. மதுக்கரையிலுள்ள கிரஷர், குவாரிகளில் கற்களை உடைத்து அரவை நடக்கும் போது புகைமூட்டத்துடன் கிளம்பும் புழுதி, துகள்கள் மேற்குப்புறவழிச்சாலையில் செல்வோர், குடியிருப்போரை பாதிக்கிறது.   கோவை தெற்கு சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கூறியதாவது: சுகுணாபுரத்தில் உள்ள எம்.சாண்ட் தயாரிப்பு, கற்களை உடைக்கும் கிரஷர் குவாரிகளை ஆய்வுக்குட்படுத்தி துாசு வெளியேறுவதை கணக்கிட்டுள்ளோம். தார் பிளான்ட்களிலிருந்து வெளியேறும் புகை குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். அந்நிறுவனங்களுக்கு விதிமுறைகளின் கீழ், செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து ஆய்வு நடக்கிறது. காற்றின் தரம் பாதிக்கப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ